காட்டுத்தீயை கணிக்கும் வானிலை.. - புதிய தொழில்நுட்பம்!!
2 ஆனி 2025 திங்கள் 08:10 | பார்வைகள் : 3529
கோடை காலம் ஆரம்பித்ததோடு, காட்டுத்தீ பரவலும் ஆரம்பமாகிறமை அறிந்ததே. பிரான்சில் முதன் முறையாக காட்டுத்தீ தொடர்பான விபரங்களை காண்காணிக்கக்கூடிய கருவிகள் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
வானிலை எச்சரிக்கைகளை ‘மஞ்சள் - செம்மஞ்சள் - சிவப்பு’ போன்ற வண்ணங்களில் வகைப்படுத்துவது போல், இந்த காட்டுத்தீ தொடர்பான வானிலைக்கும் நிறங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த எச்சரிக்கைக்காக பச்சை நிறமும், மிதமான எச்சரிக்கைக்காக மஞ்சள் நிறமும், அதிக எச்சரிக்கைக்காக செம்மஞ்சள் நிறமும், உட்சபட்ச எச்சரிக்கை என்றால் சிவப்பு நிறமும் என நான்கு பிரிவுகளில் இந்த எச்சரிக்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீ அபாயங்களின் அளவுகளை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கணிக்கக்கூடிய ரேடார் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையான மாதங்கள் வரையும் இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவிக்கிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan