முதல் எலக்ட்ரிக் பைக் E-VO-ஐ வெளியிட்ட ஹோண்டா
1 ஆனி 2025 ஞாயிறு 14:56 | பார்வைகள் : 5575
ஹோண்டா (Honda) தனது முதல் முழுமையான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது Wuyang-Honda என்ற பெயரில், ஹோண்டா மற்றும் அதன் உள்ளூர் கூட்டாளியானGuangzhou-வின் கூட்டாண்மையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் பைக் “E-VO” என பெயரிடப்பட்டுள்ளது.
E-VO பைக், cafe-racer ஸ்டைலில் round headlamp, clip-on handlebar மற்றும் bar-end mirror-களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்டியில் அமைந்த பேட்டரி பகுதி, பைக்கின் மொத்த வடிவமைப்புடன் ஒன்றிணைந்து அழகான தோற்றத்தை வழங்குகிறது.
இந்த பைக் 4.1kWh மற்றும் 6.3kWh என இரண்டு பேட்டரி வகைகளில் வருகிறது.
4.1kWh பேட்டரி வகை 120 கிமீ ரேஞ்ச் கொண்டது மற்றும் 1.5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும்.
6.3kWh பேட்டரி வகை 170 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது மற்றும் 2.5 மணி நேரம் தேவைப்படுகிறது. இரண்டிலும் ஒரே 15.3kW மொட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பைக்கின் முக்கிய அம்சங்களில் 7 இன்ச் TFT screen, மூன்று ரைடிங் மோடுகள், நெவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் மானிட்டரிங் அமைப்பு ஆகியவை உள்ளன.
பேசிக் மொடலில் முன்பக்க கமெரா மற்றும் ஹை-எண்டு மொடலில் பின்பக்க கமெரா வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதன் விலை சுமார் 37,000 யுவான். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இதன் அறிமுகம் பற்றி இன்னும் தகவல் இல்லை.
ஆனால் ஹோண்டா தற்போது Activa e மற்றும் QC1 எனும் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan