ஐபிஎல் 2025 குவாலிபையர் இரண்டாவது போட்டி! மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணியுடன் மோதல்
1 ஆனி 2025 ஞாயிறு 14:56 | பார்வைகள் : 3966
ஐபிஎல் 2025 குவாலிபையர் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று தனது வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறிவிட்டது.
அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பதை முடிவு செய்யும் குவாலிபையர் 2 போட்டி இன்று நடைபெற உள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியே 3ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.
ஆனால், விளையாடிய 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியையே தழுவியுள்ளது. இதன் காரணமாக இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 81 (50) ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். அவரைப் போலவே சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்றோரும் நல்ல ஸ்ட்ரைக் ரைட் வைத்துள்ளனர்.
எனவே, துடுப்பாட்டத்தில் வலுவாக உள்ள மும்பை அணி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan