◉◉ விசேட செய்தி : பரிஸ் : PSG வெற்றிக்கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவர் பலி!!

1 ஆனி 2025 ஞாயிறு 10:45 | பார்வைகள் : 2854
PSG வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நேற்று நள்ளிரவில் பரிசில் பலத்த வன்முறை பதிவானமை அறிந்ததே. இந்நிலையில், பெண் ஒருவர் பலியாயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில், அவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது. இதில் குறித்த பெண் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக Grenoble மாவட்டத்தில் மகிழுந்து ஒன்று கூட்டத்துக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு Landes மாவட்டத்தின் Dax நகரில் இளம் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தார்.
இந்த அனைத்து சம்பவங்களும் PSG அணி ஆதரவாளர்களின் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1