சாம்பியன் லீக் கொண்டாட்டம்.. பரிசில் வன்முறை.. 300 பேர் கைது!!
1 ஆனி 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 4045
சாம்பியன் லீக் போட்டியில் PSG கழகம் வெற்றி பெற்றதை அடுத்து, பரிசில் ரசிகர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த வன்முறைகள் இடம்பெற்றன. 300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
PSG இன் வெற்றியை அடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பரிசின் வீதிகளில் ஆக்கிரமித்திருந்ததனர். Porte de Saint-Cloud மற்றும் Champs-Élysées பகுதிகளில் நள்ளிரவின் போது பலத்த வன்முறை வெடித்தது. ரசிகர்கள் வீதிகளில் குப்பைத்தொட்டிகளை போட்டு எரித்தும், மகிழுந்துகளை உடைத்தும் வெற்றிக்களிப்பை கொண்டாடித்தீர்த்தனர்.
அதிகாலை 2 மணி அளவு நிலவரப்படி 294 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக பரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனனர்.
Champs-Élysées இல் உள்ள கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஆரவாரத்தைக் கட்டுப்படுத்த Place de l'Étoile பகுதியில் காவல்துறையினர் ‘தண்ணீர் சிகிச்சை’ அளித்தனர். தண்ணீர் பீரங்கி மூலம் கூட்டத்தினரிடையே தண்ணீர் அடிக்கப்பட்டு அவர்கள் கலைக்கப்பட்டனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan