பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைப்பு - மீட்கப்பட்ட தோட்டாக்கள்
31 வைகாசி 2025 சனி 10:52 | பார்வைகள் : 1915
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முற்பகல் முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 06, கையடக்க தொலைபேசிகள் 03, சாரதி அனுமதிப் பத்திரம், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் வேறு ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த பின்னணியில், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan