கிரிப்டோ பணம் தொடர்பான கடத்தல் முயற்சி - நீதிபதி முன் 25 குற்றவாளிகள்!
30 வைகாசி 2025 வெள்ளி 18:20 | பார்வைகள் : 2951
கிரிப்டோவால் செல்வம் பெற்றவர்களை குறிவைக்கும் ஒரு குற்றவாளி குழுவின் விசாரணை நடவடிக்கையில் 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இன்று நீதிவிசாரணைக்காக நீதிபதியின் முன்னர் நிறுத்தப்பட்டனர்.
இந்த வழக்கானது முக்கியமான இரண்டு சம்பவங்களைக் குறிவைத்து நடாத்ப்படுகின்றது
பாரிஸ் 11ஆம் மாவட்டத்தில் மே 13ஆம் தேதி நடந்த கடத்தல் முயற்சி
நோந்தில் (Nantes) மே 26ஆம் தேதி நடந்த மற்றொரு கடத்தல்முயற்சி
பரிஸ் சம்பவத்தில், Paymium நிறுவனத்தின் நிறுவனர் ; Pierre Noizat இன் மகளை கடத்த சிலர் முயற்சித்தனர். முகம் மறைத்த நான்கு பேர் ஒரு Chronopost வாகனத்தில் கடத்த முயன்றனர். மக்களால் முயற்சி தோற்கடிக்கப்பட்டுத் தப்பியோடியும் இருந்தனர்.
நோந்தில் ஒரு கடத்தல் முயற்சியைக் காவற்துறையினர் தடுத்தனர். 10 பேர் அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
பிரான்சின் விசேட குற்றவியல் பிரிவு (JIRS) தற்போது இந்த இரு வழக்குகளும் ஒரே குற்றவாளி வலையமைப்பால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறது.
ஆனால், ஜனவரி மாதத்தில் Ledger நிறுவனத்தின் கூட்டு நிர்வாகியான David Balland கடத்தப்பட்ட வழக்குடன் இந்தக் குற்றவாளிகளிற்குத் தொடர்பில்லை எனவும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan