ஐபிஎல் 2025 -விராட் கோலியின் 9000 ஓட்டங்கள் …
29 வைகாசி 2025 வியாழன் 15:34 | பார்வைகள் : 2189
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடந்த RCB மற்றும் LSG அணிகளுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அதிரடியான அனுபவத்தை வழங்கியது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அமைத்த 227 ஓட்டங்கள் இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளுக்கு 8 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றிகொண்டு, குவாலிஃபையர் 1-க்கு முன்னேறியது.
விராட் கோலி, இந்த போட்டியில் அரைசதம் அடித்து 9000 T20 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக சாதனை படைத்தார்.
IPL-இல் வெற்றி பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் அவருடைய அரைசதங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் IPL-ல் அதிக அரைசதங்கள் (63) அடித்த வீரராக டேவிட் வார்னரின் சாதனையை மிஞ்சினார்.
இப்போட்டியின் நாயகனாக ஜிதேஷ் சர்மா திகழ்ந்தார். ஆறாம் நிலை வீரராக அவர் விளாசிய 85 ஓட்டங்கள் IPL வரலாற்றில் மூன்றாவது உயர்ந்த ஸ்கோராகும்.
ஹார்டிக் பாண்ட்யா (91) மற்றும் ஆண்ட்ரே ரசல் (88) ஆகியோருக்கு பின்னால் இவர் இடம் பிடித்துள்ளார். ஜிதேஷ் - மயங்க் அகர்வால் கூட்டணி வெற்றிக்கு வழிவகுத்தது.
227 ஓட்டங்கள் என்ற IPL வரலாற்றில் RCB-யின் அதிக ரன் சேஸாக இது அமைந்தது.
மேலும், IPL வரலாற்றில் ஒரே சீசனில் 7 குரூப் நிலை போட்டிகளையும் வென்ற முதல் ஐபிஎல் அணியாக RCB பெயரெடுத்துள்ளது.
LSG கேப்டன் ரிஷப் பண்ட் 61 பந்துகளில் 118 ஓட்டங்கள் அடித்து ஏகானா மைதானத்தில் IPL வரலாற்றில் முதலாவது சதத்தை பதிவு செய்தார். ஆனால், அவரது ஆட்டம் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan