தீ விபத்தில் உல்லாசப் பயணிகள்!!

28 வைகாசி 2025 புதன் 22:33 | பார்வைகள் : 3909
ஹெரோ (Hérault) மாவட்டத்தில், Cap d'Agde இலுள்ள Les Sables விடுமுறை முகாம்களில் ஏற்பட்ட கடும் தீயில் 1.5 ஹெக்டேர் பரப்பளவான பகுதியையும், 181 அசையும் வாகன வீடுகளையும் mobile-homes) சேதப்படுத்தி உள்ளது.
நால்வர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர், சுமார் 600 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுக் காப்பாற்றப்பட்டனர். தீ பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
'நாங்கள் கருப்பு புகையைக் கண்டதும் 15 நிமிடத்தில் வெளியேற பணிக்கப்பட்டோம்' என உல்லாசப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காற்றின் தீவிர வேகத்தால், தீ மிக விரைவாகப் பரவியது. இந்தத் தீயை அணைப்பதில் 160 தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தங்களது உல்லாச முகாம்களிற்குத் திரும்ப முடியாததால், நகராட்சிகளில் உடனடி தங்குமிடம் ஏற்பாடு செய்ததுள்ளனர்.
காவற்துறையினரும் தீயணைப்புப் படையினரும் தீவிபத்தின் காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1