இந்த கோடையில் பரிஸ்-பிளாஜ்கள் பிரேசிலிய கடற்கரைகள் போல் காட்சி!
28 வைகாசி 2025 புதன் 19:24 | பார்வைகள் : 4606
இந்த கோடைக்காலத்தில், பரிஸ் நகரம் பிரேசிலிய கலாசாரத்தை கொண்டாட «பரிஸ்-பிளாஜ்» என்ற திருவிழாவை ஜூலை 5 முதல் தொடங்கவுள்ளது. சென்நதியின் கரையில் 130 மீட்டருக்கும் அதிகமாக உண்மையான மணல், கடற்கரை கைப்பந்து, இசை நிகழ்ச்சிகள், வெளியிடங்களில் சினிமா, உணவுகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டுக்கான பரிஸ்-பிளாஜ் விழாவுக்கு பிரபல பிரேசிலிய கால்பந்து வீரர் ராய் (Rai) முக்கிய விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். பார்வையாளர்கள் பிரேசிலிய கடற்கரையில் இருப்பது போல் உணரும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
Hôtel de Ville பகுதியில், கடற்கரை கரப்பந்து மைதானங்கள் அமைக்கப்படுகின்றன, மற்றும் ஆன் ஹிடால்கோ வாக்குறுதியளித்தபடி «நகர்ப்புற காடு» எனப்படும் புதிய பகுதி திறக்கப்பட உள்ளது.
விடுமுறைக்கு செல்ல முடியாதவர் இவ்விழாவில் கலந்துகொண்டு கலை, இசை மற்றும் விளையாட்டை அனுபவிக்க முடியும். பாதுகாப்பான மூன்று நீச்சல் பகுதிகள் சென்நதியில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இந்த அனுபவம் பரிசியர்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும் என ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan