மெலன்சோனை விமர்சிக்கும் விசாரணை நூல் "La Meute" மாபெரும் வெற்றி!!!

28 வைகாசி 2025 புதன் 15:19 | பார்வைகள் : 2293
Charlotte Belaïch மற்றும் Olivier Pérou எழுதிய «La Meute» என்ற நூல், ஜோன்-லூக் மெலன்சோன் தலைமையிலான பிரான்சு இன்சுமிஸ் (LFI) இயக்கத்தின் உள்கட்டமைப்பை விமர்சிக்கும் விசாரணை நூலாகும்.
இந்த நூல் மே 7ஆம் தேதி வெளியானதிலிருந்து இரண்டு வாரங்களில் 52,000 பிரதிகள் விற்கப்பட்டு, பிரான்சில் அதிகம் விற்கப்படும் நூல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது எழுத்தாளர்கள் இருவரும் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து, 200 பேர் பேட்டியெடுத்ததின் விளைவாக உருவானது.
மெலன்சோன் தலைமையிலான இயக்கத்தில் பயமுறுத்தல் மற்றும் மிரட்டல் நிலவுகிறது என நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியானதும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை, குறிப்பாக சமூக வலைதளங்களில், சந்தித்துள்ளது.
ஜான்-லூக் மெலன்சோனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எழுத்தாளர்கள் மிரட்டல்களுக்கும் சிக்கியுள்ளனர். Flammarion பதிப்பகம் அவர்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை அச்சமின்றி செய்யும் உரிமை கொண்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1