பிரான்சின் ஐந்து நாள் அரசன்!
19 சித்திரை 2016 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 25150
பிரான்சில் முடியாட்சி இருந்த காலத்தில், ஒருவர் வெறும் 'ஐந்து' நாட்கள் மட்டுமே பிரான்சின் அரசராக இருந்தார். அந்த அரசனை பற்றி தெரிந்துகொள்வோம்!
* King John I என்பவரே இந்த 'ஐந்து நாள் அரசன்!' 15ம் திகதி நவம்பர் மாதம் 1316 ஆண்டு தொடக்கம், 20ம் திகதி, நவம்பர் மாதம் 1316 ஆம் ஆண்டு வரையான, ஐந்து நாட்கள் மட்டுமே இவர் அரசனாக இருந்தார்.
* இவர் பிறந்த திகதி தெரியுமா?? நவம்பர் 15, 1316 அன்று இவர் பிறந்தார். அதாவது பிறக்கும் போதே அரசனாக முடிசூட்டப்பட்டு பிறந்தார். சரி, இவர் இறந்த திகதியை பாருங்கள். 20 நவம்பர் 1316 அன்று இறந்தார். மயங்கிவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
* Louis X அரசனுக்கும், அவரது மனைவி
Clemenceக்கும் மகனாக பிறந்த இந்த குழந்தை, பிறந்து ஐந்து நாட்களில் இறந்துவிட்டான். அவன் உயிரோடு இருந்த ஐந்து நாட்களும் பிரான்ஸ் நாட்டின் அரசனாகவே இருந்தான்.
* உலகம் முழுவதிலும், தன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருந்த ஒரே அரசன் King John I ஆகும்.
*அரசன் (?!??) இறந்ததற்கான காரணம் இதுவரை சரியாக சொல்லப்படவில்லை. விஷம் பருக்கப்பட்டு இறந்துள்ளார் என பொதுமக்களிடையே வதந்தி பரப்பப்பட்டது.
* குழந்தை அரசன் இறந்தது பலருக்கு நன்மையாக அமைந்தது. 'எங்கள் அரசன் எப்படி இறந்தான்??!' என்ற பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல, John'ன்னின் தந்தையால் முடியவில்லை. நெருக்கடி அதிகமாக அவரும் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இறப்பும் இன்றுவரை ரகசியமாகவே இருக்கிறது.
*பிறந்த குழந்தை அரசனாகவும், அந்த அரசன் வெறும் ஐந்து நாட்கள் மாத்திரமே அரசனாக இருந்ததும், தன் வாழ்நாள் முழுவதும் அவர் அரசனாக இருந்ததும் உலகத்தில் இவர் ஒருவருக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan