சாதனை படைத்த Toyota Fortuner - இந்தியாவில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை
28 வைகாசி 2025 புதன் 11:46 | பார்வைகள் : 8127
இந்தியாவில் Toyota-வின் Fortuner SUV கார் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் டொயோட்டா Fortuner SUV மொடல் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதில் Fortuner மற்றும் அதன் மேம்பட்ட பதிப்பான Legender இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
2009-ஆம் ஆண்டு அறிமுகமானது முதல், Fortuner தனது சக்திவாய்ந்த 4X4 திறன் மற்றும் ஆடம்பர வசதிகளுடன் SUV பிரிவில் முன்னணியில் இருந்து வருகிறது.
2021-ல் அறிமுகமான Fortuner Legender, Dual Tone Style , sequential LED Turn Indicators, Wireless Charging மற்றும் 11 Speaker JBL சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
இது 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜினால் இயக்கப்படுகிறது (201 bhp, 500 Nm டார்க்).
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் விற்பனை துணைத் தலைவரான வரிந்தர் வாத்வா, “இந்த SUV மொடலின் 3 லட்சம் விற்பனை எனும் மைல்கல்லை கொண்டாடுகிறோம். சொகுசு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமாக ஃபார்ச்சூனர் நீடித்து வருகிறது.” என கூறியுள்ளார்.
டொயோட்டா விரைவில் இந்தியாவில் Fortuner MHEV (Mild Hybrid Electric Vehicle) மொடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தென் ஆபிரிக்காவில் இது வெளியிடப்பட்டது. இதே 2.8 லிட்டர் டீசல் என்ஜினுடன், 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் (16 bhp & 42 Nm கூடுதல் சக்தி) இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், டொயோட்டா தனது முதல் மின்சார வாகனமான Urban Cruiser EV-யையும் 2025 இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மாருதி e-Vitara மொடலின் Re-badge வடிவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan