லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் அபார சாதனை
28 வைகாசி 2025 புதன் 11:46 | பார்வைகள் : 3860
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்ததன் மூலம் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார்.
ஐபிஎல் 2025யின் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் லக்னோ அணி நிர்ணயித்த 228 ஓட்டங்கள் இலக்கினை, பெங்களூரு 19வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் மிட்செல் மார்ஷ் 627 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் லக்னோ அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற கே.எல்.ராகுலின் (616) சாதனையையும் முறியடித்தார்.
லக்னோ அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்
• மிட்செல் மார்ஷ் - 627 ஓட்டங்கள்
• கே.எல்.ராகுல் - 616 ஓட்டங்கள் (2022), 520 ஓட்டங்கள் (2024)
• நிக்கோலஸ் பூரன் - 524 ஓட்டங்கள் (2025)
• டி காக் - 508 ஓட்டங்கள் (2022)
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan