Noisy-le-Sec: 15 வயது சிறுவன் முகமூடி குழுவால் தாக்கப்பட்டார்!

26 வைகாசி 2025 திங்கள் 16:34 | பார்வைகள் : 3288
Noisy-le-Secஇல் (Seine-Saint-Denis) கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சுமார் 8 மணி அளவில் Stephenson பகுதியில் 15 வயது சிறுவன் முகமூடி அணிந்த பத்து பேர் கொண்ட குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
14-15 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் la cité Pierre Feuillère குடியிருப்பில் திடீரென புகுந்து, அந்த சிறுவனை இரும்புக்கம்பிகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்.
தலையில் காயம் மற்றும் கை முறிவு ஏற்பட்ட நிலைமையில், தாக்கப்பட்ட சிறுவனை மருத்துவக்குழு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பவம் நடந்த பகுதியில் இடம்பெறும் குழுக்களுக்கிடையிலான பழிவாங்கல் போக்கின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிறுவனது தாய் "அவன் ஒரு அமைதியான பையன், சண்டைக்கு போகிறவனல்ல என்றும், குற்றவாளியாக நினைக்க வேண்டாம்" என்றும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1