தோனியின் அபார சாதனையை முறியடித்த பண்ட்! லீட்ஸ் டெஸ்டில் அபாரம்

21 ஆனி 2025 சனி 13:57 | பார்வைகள் : 2485
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் ரிஷாப் பண்ட், முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்தார்.
லீட்ஸின் ஹெட்டிங்க்லே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் குவித்துள்ளது. அணித்தலைவர் சுப்மன் கில் 127 ஓட்டங்களுடனும், ரிஷாப் பண்ட் 65 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதில் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அதிரடி ஆட்டத்தின் மூலம் சாதனை ஒன்றை படைத்தார்.
டெஸ்டில் குறைந்த இன்னிங்சில் 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் பண்ட்தான்.
இதற்கு முன் எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) 144 இன்னிங்சில் 3,000 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
ஆனால், பண்ட் வெறும் 76 இன்னிங்ஸ்களிலேயே 3000 ஓட்டங்கள் எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
ரிஷாப் பண்டின் ஸ்கோரில் 6 சதங்கள், 16 அரைசதங்கள் அடங்கும். அவர் ஓர் இன்னிங்சில் அதிகபட்சமாக 159 ஓட்டங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1