புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!
21 ஆனி 2025 சனி 13:12 | பார்வைகள் : 3306
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடு சென்று நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூருக்கு இரண்டாவது ராஜதந்திர சுற்று பயணத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையும் பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
நிலைப்பாடு
அதன்படி எம்.பி.,க்கள் குழு வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு சென்று பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பியது. அந்த ஒரு குழுவிற்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை. ஆனால் எதிர்ப்பை மீறி, அனைத்துக்கட்சி குழு எம்.பி.,க்களுடன் பல்வேறு நாடுகளுக்கு சசி தரூர் பயணம் மேற்கொண்டார்.
நாடு திரும்பிய எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து பாராட்டினார். அதன் பிறகு சசி தரூர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா, இங்கிலாந்து, கிரீஸ்!
இந்நிலையில், நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூருக்கு இரண்டாவது ராஜதந்திர சுற்று பயணத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு சசி தரூருக்கு கிடைத்துள்ளது.
இரண்டு வார பயண திட்டத்தை சசி தரூர் மீதான நம்பிக்கையில் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2வது பயணம்
பயணத்தின் போது, சசி தரூர் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அவர் பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் படி, இந்தியாவின் நட்பு நாடுகளுடன் சில முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இவரது 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan