Bac- பொருந்தாத பாடத் தலைப்பு - பரீட்சையை மீண்டும் எழுத உத்தரவு
21 ஆனி 2025 சனி 08:28 | பார்வைகள் : 12058
Antibes நகரில் உள்ள Jacques Audiberti லிசேயில் பயிலும் 17 வயது மாணவி லினா, பொருந்தாத பாடத் தலைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொது பிரிவுக்குச் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 13ஆம் தேதி, தொழில்நுட்பப் பிரிவுக்கான பிரஞ்சுப் பரீட்சை தலைப்பை தவறுதலாக பெற்றுள்ளார்.
தவறான தலைப்பில் நான்கு மணி நேரம் எழுதிய பின்னர் மட்டுமே, தோழிகளுடன் உரையாடியபோது, தன்னால் பெற வேண்டிய தலைப்பு அல்ல என்பது தெரிய வந்தது.
அச்சமடைந்த லினா தனது மாமனாருக்கு தகவல் அளித்தார். பிறகு பள்ளித் தலைமையாளர் ஜொசெலின் ஜிரோவுடன் (Jocelyne Girault) தொடர்பு கொண்டு, நீஸ் கல்வித் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இறுதியில், கல்வி அமைச்சகத்தின் அனுமதியுடன், லினாவுக்கு மறு பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டது.
ஜூன் 19ஆம் தேதி, லினா மீண்டும் லிசே வந்து அமைதியான இடத்தில் பரீட்சையை எழுதியுள்ளார்.
இது ஒரு மனவருத்தமளிக்கும் தவறு. என் பணிக்காலத்தில் இது இரண்டாவது முறை நடைபெறுகிறது என லிசே தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan