பேட்டரி வாடகை முறையுடன் ஜூலை-1 வெளியாகும் Hero Vida VX2
20 ஆனி 2025 வெள்ளி 12:18 | பார்வைகள் : 6931
ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனத்தின் மின் வாகன பிராண்டான Vida, ஜூலை 1, 2025 அன்று தனது புதிய மொடலான Vida VX2-ஐ வெளியிடுகிறது.
இதனுடன், Battery-as-a-Service (BaaS) எனப்படும் புதிய பேட்டரி வாடகை முறை அறிமுகமாக உள்ளது.
இந்த மொடல், வாடிக்கையாளர்கள் பைக்கையும் பேட்டரியையும் தனித்தனியாக வாங்கும் வசதியை வழங்குகிறது.
இதன்மூலம் ஆரம்ப முதலீட்டை குறைத்து, மக்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை எளிதாக அணுகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
BaaS மொடலில், வாடிக்கையாளர்கள் தங்கள் நாள்/மாதத் தேவைகளுக்கு ஏற்றவாறு சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களை தேர்வு செய்யலாம்.
இதனால், செலவு குறையும், வசதி அதிகரிக்கும், மேலும் வட்டார மக்களும் இதைப் பயன்படுத்த ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படும்.
Vida VX2-ன் சிறப்பம்சங்களில், Vida V2 மோதல்களில் உள்ள மோட்டார் மற்றும் பிளாட்ஃபார்ம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதன் பேட்டரி திறன் குறைவாக (2.2kWh அல்லது 3.4kWh) இருக்கலாம், மேலும் Keyless Entry-க்கு பதிலாக Key Slot போன்ற அடிப்படை வசதிகளே இருக்கும்.
Vida V2-வின் ஆரம்ப விலை ரூ.74,000 (எக்ஸ்-ஷோரூம்) என்பதால், VX2 விலை போட்டியுடனும் சிக்கனமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது Bajaj Chetak, TVS iQube போன்ற மொடல்களுக்கு நேரடி போட்டியாளராக விளங்கும்.
மேலும், ஹீரோ நிறுவனம் நிறுவியுள்ள 3,600 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் 500 சேவை மையங்கள் Vida VX2 வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையளிக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan