போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
20 ஆனி 2025 வெள்ளி 05:58 | பார்வைகள் : 3051
வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15 சதவீதம் குறைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; 33 போயிங் 787-8/9 விமானங்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளை விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதில், 26 விமானங்களின் சோதனைகள் நிறைவடைந்து விட்டன. கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானங்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
அதேவேளையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் வான்வழியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 83 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் ஜுலை 2வது வாரம் வரையில் சர்வதேச நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயணத் திட்டத்தை மாற்றலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan