காபி: அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா?
19 ஆனி 2025 வியாழன் 16:12 | பார்வைகள் : 2878
தினமும் அதிகாலையில் பால் சேர்க்காத 'பிளாக்' காபி குடிக்கும் பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், காலையில் காபி அருந்துவது இறப்பு அபாயத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காபி அருந்துவதற்கும் இறப்பு அபாயத்திற்கும் இடையிலான தொடர்பு, அதில் சேர்க்கப்படும் இனிப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவை பொறுத்து மாறுபடுகிறது. தினமும் 1 முதல் 2 கப் பிளாக் காபி அருந்துவது, ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தையும், குறிப்பாக இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறைந்த அளவு சர்க்கரையுடன் காபி அருந்துவது, இறப்புக்கான அபாயத்தை 14 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கப் காபி அருந்துவது, எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயத்தை 16 சதவீதம் குறைக்கிறது.தினமும் 2 முதல் 3 கப் காபி அருந்துபவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதமாக சற்றே அதிகரிக்கிறது.
ஆனால், 3 கப்களுக்கு மேல் காபி அருந்துவது ஆரோக்கியமானது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan