பிரான்சில் €50,000 பெறுமதியுடைய TV அறிமுகம்!!

19 ஆனி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 5712
€50,000 பெறுமதியுடைய TV ஒன்று பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான LG இதனை தயாரித்துள்ளது.
அது ஒரு திரை இல்லாத - கண்ணாடியிலான transparente தொலைக்காட்சியாகும். 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பட கண்காட்சியில் LG நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்ட இந்த தொலைக்காட்சியை நேற்று ஜூன் 18, புதன்கிழமை பிரான்சில் பொதுமக்கள் பாவனைக்காக விற்பனைக்கு விட்டுள்ளது LG நிறுவனம்.
தொலைக்காட்சியின் அடிப்பகுதியில் உள்ள லட்சக்கணகான RGB (RED-GREEN-BLUE) LED க்கள் காட்சிகளை கண்ணாடி வழியாக அனுப்பி சரியான காட்சியை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஒரு 4K தர திரையை உருவாக்கும். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டால் வெறுமனே கண்ணாடி மாத்திரமே தெரியும். தொலைக்காட்சியின் பின்னால் உள்ளவை அனைத்தும் முன்பாக தெரியும்.
தொலைகாட்சியை பயன்படுத்த குறைந்த பட்ச இருட்டு தேவை என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1