விஷமாக மாறிய உணவு! - சிறுவன் பலி.. ஆறு பேர் மருத்துவமனையில்..!!
19 ஆனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 3582
விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்டு உணவை உட்கொண்ட சிறுவன் ஒருவன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வடக்கு பிரான்சின் ஹ்ஜ்க் மாவட்டத்தில் உள்ள Saint-Quentin எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 13 ஆம் திகதி குறித்த நகரில் அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர்கள் அனைவரும் குடும்ப விருந்து விழா ஒன்றில் கலந்துகொண்டு உணவை உட்கொண்டனர். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட ஒரேபோன்ற உணவு, சிறுவர்களை உடல்நலக்குறைக்குள் தள்ளியுள்ளது. 12 - 13 - 14 வயதுடைய சிறுவர்கள் ஏழு பேருக்கு சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, அவகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஐந்து நாட்கள் சிகிச்சையின் பின்னர் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிலர் வீடு திரும்பியுள்ளதாகவும், சிலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan