49 பந்தில் 106 ரன்.. சிக்ஸர் மழைபொழிந்த மேக்ஸ்வெல்!
18 ஆனி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 4108
மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் சதம் விளாசியதன் மூலம், வாஷிங்டன் ஃபீரிடம் அணி இமாலய வெற்றி பெற்றது.
கலிபோர்னியாவின் ஓக்லேண்ட் கோலிசியம் மைதானத்தில் நடந்த போட்டியில், வாஷிங்டன் ஃபீரிடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய வாஷிங்டன் அணியில் ரச்சின் ரவீந்திர 8 ஓட்டங்களில் வெளியேற, மிட்சேல் ஓவன் அதிரடியாக 32 (11) ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து வந்த கோஸ் 12 ஓட்டங்களிலும், ஜேக் எட்வார்ட்ஸ் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, சாப்மேன் 17 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
எனினும் தனியாளாக அணித்தலைவர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்ஸர்மழை பொழிந்த கிளென் மேக்ஸ்வெல், ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 13 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 208 ஓட்டங்கள் குவித்து. சங்கா, கார்னே டிரை தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி, வாஷிங்டன் ஃப்ரீடத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 16.3 ஓவரில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக சைப் படார் 32 ஓட்டங்களும், ஹோல்டர் 23 (16) ஓட்டங்களும் எடுத்தனர். ஜேக் எட்வார்ட்ஸ், ஓவன் தலா 3 விக்கெட்டுகளும், நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சமீபத்தில் ஒருநாள் போட்டியில் ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெலின் இந்த ருத்ர தாண்டவ ஆட்டம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan