இலங்கை அணியை அச்சுறுத்திய கேப்டன்- வெளியேற்றிய அசிதா, ஏஞ்சலோ மேத்யூஸ் கூட்டணி
18 ஆனி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 1611
காலி டெஸ்டில் 148 ஓட்டங்கள் விளாசிய வங்காளதேச அணித்தலைவர், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி முதல் நாள் முடிவில் 292 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்காளதேச அணியில், நஜ்முல் ஷாண்டோ 150 ஓட்டங்களை நோக்கி முன்னேறினார்.
ஆனால், அணியின் ஸ்கோர் 309 ஆக உயர்ந்தபோது அசிதா பெர்னாண்டோ ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து ஷாண்டோ ஆட்டமிழந்தார்.
மொத்தம் 279 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஒரு சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 148 ஓட்டங்கள் குவித்தார்.
அவரது விக்கெட் மூலம் ரஹிம் உடனான 264 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையில், வங்காளதேச அணிக்காக அதிக ஸ்கோர் எடுத்த கேப்டன்களில் மூன்றாவது இடத்தை, நாஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) பிடித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan