இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
18 ஆனி 2025 புதன் 11:58 | பார்வைகள் : 2133
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதலீடு
பின்னர், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ஜி 7 மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த கனடா பிரதமருக்கு நன்றி. இந்தியா மற்றும் கனடா உறவுகள் பல வழிகளில் மிகவும் முக்கியமானவை. பல கனடா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இந்திய மக்களும் கனடா மண்ணில் மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளனர். ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனித குலத்தை வலுப்படுத்த வேண்டும்.
ஜனநாயக நாடு
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜி20 உச்சிமாநாட்டின் தலைவராக, உலகிற்கு நன்மை பயக்கும் பல முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது. ஜி7 மாநாட்டிற்கு இந்தியாவை அழைத்ததற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் 2015க்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குச் சென்று கனடா மக்களுடன் இணையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில், நான் அதிர்ஷ்டசாலி.
வாழ்த்துக்கள்
கனடா புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. எனவே இந்தத் தேர்தலில் அவர் பெற்ற மகத்தான வெற்றிக்கு நான் அவரை வாழ்த்துகிறேன். மேலும் வரும் காலத்தில், இந்தியாவும், கனடாவும் பல துறைகளில் இணைந்து பணியாற்றி முன்னேற்றம் அடையும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
உறுதியாக இருக்கிறோம்!
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் அதிபர்கள் ரமபோசா, லூலா ஆகிய நண்பர்களுடன் தெற்குப் பகுதி நாடுகளின் பிரச்னைகள் குறித்து பேசினேன். அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan