இன்னும் 2 வாரங்களில் வரப்போகும் பேரழிவு? நவீன பாபா வங்காவின் கணிப்பு
17 ஆனி 2025 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 2212
ஜூலை 5ஆம் திகதி உலகில் பேரழிவு நடக்கப்போவதாக நவீன பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த ரையோ தத்சுகி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார்.
அவற்றில் உள்ள பெரும்பாலான விடயங்கள் உண்மையில் நடப்பதால், இவரை புதிய பாபா வங்கா என்று அழைக்கின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவர் வரைந்து பல விடயங்களை கூறிவருகிறார்.
ஆனால் டயானாவின் மரணம், கொரோனா பேரிடர், 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஆகியவற்றையும், தனது கனவில் தோன்றியதாக வரைந்து வைத்திருந்தாராம்.
இது மட்டுமல்லாமல் 2030ஆம் ஆண்டில் கொரோனா போன்ற ஒரு பெருந்துயர் மீண்டும் வரும் எனவும் தத்சுகி கணித்திருந்தார்.
இந்த நிலையில், ரையோ தத்சுகி (Ryo Tatsuki) எழுதியிருக்கும் புத்தகத்தில் சூலை 5ஆம் திகதி பேரழிவு காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் ஜப்பானில் இந்த பேரழிவு ஏற்படும் என குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அந்நாளில் ஜப்பானுக்கு செல்லும் விமானங்களில் முன்பதிவுகள் குறைந்து, ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் இந்த கணிப்பு பல்வேறு வகையிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விடுதிகள் முன்பதிவு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ஜப்பானியர்கள் பலர் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலா திட்டங்களையும் ரத்து செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜப்பான் நாட்டின் அதிகாரிகளோ 'நவீன பாபா வங்காவின் கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்று உலகப் பேரழிவுகளை முன்கணிக்க முடியாது.
இவை வெறும் புரளி' என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan