இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் - அதிர்ச்சியில் பயனர்கள்
17 ஆனி 2025 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 2070
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை காட்ட மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா ஆகும்.
ஏற்கனேவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், sponsored posts என்ற பெயரில் பயனர்களின் Feed மற்றும் Story-யில் விளம்பரங்களை தோன்ற செய்து அதன் மூலம் பெருமளவில் பணம் ஈட்டி வருகிறது.
2024 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனம் Ads மூலம், 160 பில்லியன் டொலர்(ரூ.13.77 லட்சம் கோடி) வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியிலும் இது போன்ற Ads முறையை கொண்டு வர உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்த விளம்பரங்கள் பயனர்கள் உரையாடும் பகுதியில் இடம்பெறாது என்றும், ஸ்டேட்டஸ் பதிவிடும் பகுதியில் மட்டுமே காட்டப்படும் என தெரிவித்துள்ளது.
இதில் நாடு, நகரம், மொழி, பின்தொடரும் சேனல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலே விளம்பரங்கள் காட்டப்படும். பயனர்களின் எண்கள் விளம்பரதாரர்களுடன் பகிரப்படாது என தெரிவித்துள்ளது.
மேலும், மெட்டாவின் கணக்கு மையம் மூலமாகவும் தங்கள் விளம்பர விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியை தினமும் 1.5 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் வகையில், இதன் மூலம் வருமானம் ஈட்ட மெட்டா முடிவெடுத்துள்ளது.
மேலும், சேனல் பகுதியில், பயனர்கள் புதிய சேனலை தேடும் போது, வாட்ஸ்அப் விளம்பரப்படுத்தப்பட்ட சேனல்களை அறிமுகப்படுத்துகிறது.
சேனல் உரிமையாளர்கள் இதற்கு மெட்டாவிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அதிகளவிலான விளம்பரங்கள் கட்டப்படுவதால் அதிருப்தியில் உள்ள பயனர்களுக்கு, மெட்டாவின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan