மீண்டும் உயிரைப்பறித்த airbag! - தொடரும் அவலம்!!
17 ஆனி 2025 செவ்வாய் 12:08 | பார்வைகள் : 9218
மகிழுந்துகளுக்கான airbag பாதுகாப்பு பகுதியை தயாரிக்கும் Takata
நிறுவனத்தின் ஊழல் காரணமாக உயிர்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Reims நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் airbag சரியாக செயற்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாற்பது வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயதுடைய மகளும் ஜூன் 11 அன்று Citroën C3 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர். இதில் சிறுமி காயங்களுடன் உயிர்பிழைக்க, மகிழுந்தைச் செலுத்திய தாய், உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளில் அவரது மகிழுந்தில் இருந்த சாரதி பாதுகாப்பு கவசமான airbag சரியாக செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான Takata தயாரித்த airbag மிகவும் குறைந்த தரத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டு அது தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை 11 பேர் airbag பழுது காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் பிரான்சில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan