ரொக்கெட் ஏவும் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ - வரலாற்றுச் சிறப்பு
16 ஆனி 2025 திங்கள் 17:51 | பார்வைகள் : 1744
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் இருந்து ரொக்கெட் மூலம் Payload (சிறிய செயற்கைக்கோள்) ஏவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இது அந்த மாநிலத்தில் முதல் முறையாக நேரடி ரொக்கெட் மூலம் செயல்படுத்தப்பட்ட ஏவல் என்பதால் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவுடன் இணைந்து, Thrust Tech India Limited நிறுவனம் மேற்கொண்ட இந்த சோதனை சனிக்கிழமை மாலை 5:14:33 மணிக்கு நடந்தது.
ரொக்கெட் 1.1 கிமீ உயரம் சென்றதும், அதிலிருந்து சிறிய செயற்கைக்கோள் வெளியேறியது. அது பூமிக்கு 5 மீட்டர் உயரத்தில் வந்தவுடன், பைராசூட் திறந்து, செயற்கைக்கோள் 400 மீட்டர் வட்டத்தில் பாதுகாப்பாக தரையில் இறங்கியது.
இதற்கு முந்தைய சோதனைகள் அகமதாபாத்தில் ட்ரோன் மூலமாக நடந்திருந்தன.
ஆனால் இது நேரடி ரொக்கெட் மூலம் நிகழ்ந்திருப்பது பெரும் சாதனையாகும்.
இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் இதனை உறுதி செய்தார். Thrust Tech India இயக்குநர் வினோத்குமார், “இந்த முயற்சி மாணவர்களுக்கு விண்வெளி ஆர்வத்தை ஊக்குவிக்க” நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 900 மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோள்கள் சோதனைக்கு தயாராக உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan