மருத்துவச் சான்றிதழ் நீட்டிக்க மறுத்ததற்காக தாக்கப்பட்ட மருத்துவர்
15 ஆனி 2025 ஞாயிறு 14:42 | பார்வைகள் : 3013
பொதுமக்களிற்;குச் சேவையளிக்கின்ற ஒரு இளைய மருத்துவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
லியோன் நகரத்திற்கு அருகிலுள்ள தெசின் (Décines) என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் Soufiane, ஒரு 22 வயது பெண் நோயாளியால் தாக்கப்பட்டார். அவர், அவளுக்கான மருத்துவ விடுப்பை (arrêt maladie) நீட்டிக்க மறுத்ததற்காகவே இந்த வன்முறை நடந்துள்ளது.
மருத்துவர் ஊடகங்களிற்கு அளித்த செவ்வயில், 'அவள் எழுந்து சத்தமிட்டு, பின்னர் எனக்கு எதிராக இனம், பாலினம் சார்ந்த அவதூறுகளைப் பேசினாள்' என்று கூறினார். இதற்குப் பின்னர், எலெக்ட்ரோ கார்டியோகிராஃப் கருவியைக் கொண்டு அவர் மீது வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
'அடுத்த முறை இது என் உயிரையே வாங்கக்கூடும்' என்றும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர் மற்றும் மருத்துவ மையம் தனித்தனியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தெசின் நகரின் நகரபிதா Laurence Fautra (LR) இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். 'நாம் வாழ்கிற இந்த சமூகத்தில் மனிதர்கள் தங்கள் ஏமாற்றங்களை கட்டுப்படுத்தத் தெரியாத ஒரு மிருகத்தனதான நிலையில் உள்ளோம்' என்று தெரிவித்தார்.
மருத்துவப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் தகவலின்படி, 2023ம் ஆண்டிலிருந்து மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் கொடுமைகள் 27 சதவீதம் உயர்வடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan