Melunஇல் கத்திச் சண்டை: இருவர் படுகாயம்! குற்றவாளிகள் கைது!
.jpg)
14 ஆனி 2025 சனி 17:57 | பார்வைகள் : 2925
Melunஇல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ரயில் நிலையம் அருகே இரு குழுக்களுக்கு இடையே கத்தி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் 25 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் நுரையீரலில் குத்தப்பட்ட நிலையிலும், மற்றொருவர் இதயத்திற்கு அருகேயும் காயமடைந்துள்ளனர்.இதயத்திற்கு அருகே காயமடைந்த 20 வயதானவர் Henri-Mondor (Créteil-Val-de-Marne) மருத்துவமனைக்கு ஹெலிகப்டரில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சண்டைக்குப் பிறகு காவல்துறையினரின் வாகனத்தை மோதி, விபத்தை ஏற்படுத்தி தப்பிக்க முயற்சித்த போது, ஒரு சிறுவன் உட்பட ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் முன்பே நீதிமன்றத்தால் அறியப்பட்டவர்கள். பெரும்பாலானோர் Melunனில் வசிக்கின்றனர். இது நகரக் குழுக்களுக்கிடையேயான சண்டையல்ல என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தப் பகுதி முன்பும் பல்வேறு குற்றச்செயல்கள் நடந்த இடமாக இருந்துள்ளது; கடந்த சில ஆண்டுகளில் இங்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1