பிரான்ஸ் மெட்ரோபோலில் முதல் சிகுங்குன்யா! தடுப்பு முறைகள்!
13 ஆனி 2025 வெள்ளி 13:51 | பார்வைகள் : 8101
La Crau, Var மாவட்டத்தில் சிகுங்குன்யா நோயின் முதல் உள்ளூர் (autochtone) தொற்று பிரான்ஸ் மெட்ரொபோலில் புதன்கிழமை ஜூன் 11 அன்று கண்டறியப்பட்டுள்ளது.
Aedes aegypti மற்றும் A edes albopictus போன்ற கொசுக்களினால் இது ஏற்படுகின்றது.
நோயாளி கடந்த 15 நாட்களில் எந்தவொரு வெளிநாட்டு பாதிக்கப்பட்ட இடத்திற்கும் செல்லவில்லை, அதாவது நோய் உள்ளூரிலேயே பரவியுள்ளது.
பொதுப் பகுதிகள் மற்றும் தனியார் தோட்டங்களில், கொசுக்கள் மற்றும் முட்டை இடும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேறு நோயாளிகள் இருப்பார்களா என்று கண்டறிய ARS மற்றும் Santé publique France அமைப்புகள் ஆராய்ச்சி நடத்துகின்றன.
பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
தற்காப்பு வழிமுறைகள்:
மூடிய உடைகள் அணியவும் (முக்கியமாக காலை மற்றும் மாலை நேரங்களில்)
யன்னல்களை மூடியே வைத்திருக்கவும். குளிரூட்டிகள் அல்லது வேசாதனங்கள் பயன்படுத்தவும்
சிறுவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு கொசுத்தடுப்பு வலைகளைப் பயன்படுத்தவும்.
மூடப்பட்ட நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தல் அல்லது மூடுதல்
தோட்டங்களில் நீர் குவியும் இடங்களை வாராந்திரம் சுத்தம் செய்யவும்
நோய் அறிகுறிகள்:
உயர் காய்ச்சல் தடுமன்
மூட்டு தசை வலி
தளர்வு, தலைவலி
தோல் மேல் வெடிப்பு
போன்ற அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
சிகுங்குன்யா நேரடி மரணம் ஏற்படுத்துவதில்லை, ஆனால் பல நாட்கள் கடுமையான வலியுடன் நிலைத்திருக்கும். சமூகக் கவனிப்பும் ஒத்துழைப்பும் முக்கியம்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan