சிறார்களின் வன்முறை அதிகரிப்பு எச்சரிக்கை - பரிஸ் காவற்துறை!
13 ஆனி 2025 வெள்ளி 07:20 | பார்வைகள் : 2970
நோஜோன் நகரில் நடந்த பரிதாபமான சம்பவத்திற்கு பின், பரிசின் காவற்துறை தலைவர் லோரோன் நுனெஸ் (Laurent Nuñez), சிறுவர்கள் இடையே வன்முறை அதிகரிப்பதை உறுதிப்படுத்துகிறார்.
ஒரு தொலைக்காட்சிச் செவ்வியில் , ஒரு பள்ளி உதவியாளர் மாணவரால் கொலை செய்யப்பட்டதைக் குறித்தும், அதையடுத்து அரசு எடுத்த நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
«இன்றைய சிறுவர்கள் வன்முறையை தடுக்காமல், அதை உள்வாங்க ஆரம்பித்துவிட்டனர். இது சமூக ஊடகங்களால் முக்கியமாகத் தூண்டப்படலாம். சண்டைகள், பழிவாங்கும் செய்திகளும், செயற்கை தைரியமும், சாலைகளில் மிக மோசமான வன்முறையாக முடிகின்றது»
«அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது' என அவர் வலியுறுத்துகிறார். சிறுவர்கள் இடையே கத்தியைப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன»
«பரிசில் மாணவர் எலியாஸ் கொலை,PSG வெற்றிக்குப் பிறகு நிகழ்ந்த கலவரங்கள் பாடசாலைக் கொலை, வன்முறைகள் போன்ற பல சம்பவங்கள், சிறுவர்களிடையே இருக்கும் அதீத வன்முறையின் அளவை காட்டுகின்றன»
«மொத்த சிறுவர் குற்றச்செயல்கள் கடந்த சில ஆண்டுகளில் குறைந்தாலும், சில குறிப்பிட்ட பிரிவுகளில் சிறுவர்கள் தொடர்புடையவையாக இருப்பது அதிகரித்துள்ளது»
«தண்டனைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். குற்றவாளியின் வயதல்லை கணக்கில் எடுக்கப்படக் கூடாது. அதற்குரிய தண்டனை வகைகளை முறைப்படுத்த வேண்டும்»
எனவும் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan