பிரெஞ்சு மக்களை பயமுறுத்துவது தேசிய ஒற்றுமைக்கே ஆபத்து' – பிரான்ஸ் முஸ்லிம் மத சபை!
13 ஆனி 2025 வெள்ளி 06:00 | பார்வைகள் : 2213
அப்தெல்லா சேக்ரி, பிரான்ஸ் முஸ்லிம் மத அலோசனை மையத்தின் (CFCM) துணைத் தலைவர் மற்றும் நீம் நகரில் அமைந்துள்ள மச்ஜிதுல் சலாம் இன் தலைவர். முஸ்லிம் சகோதரர்கள் (குசèசநள அரளரடஅயளெ) அமைப்பு பற்றி அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை பற்றி அவர் எதிர்வினை தெரிவித்தார்.
தடைசெய்யப்படும் இந்த அமைப்புகளிற்கு இவர் வக்காலத்து வாங்க வந்துள்ளார்.
'இந்த வகையான குற்றச்சாட்டுகள் மிகவும் கேவலமானது. பிரான்ஸ் முஸ்லிம்களை அரசியல் தேடலுக்காக குறைகூறுவது போதுமானது! இஸ்லாமையும், சரியாவையும் பயமுறுத்தும் கருவியாக பயன்படுத்துகிறார்கள என்பது உண்மையல்ல. இது தேசிய ஒற்றுமையை சீரழிக்கிறது.'
அவருடைய கருத்துப்படி, முஸ்லிம் சகோதரர்கள் அமைப்பில் சிலர் கடுமையான மதநம்பிக்கையுடன் இருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, நாட்டின் எதிரிகளாகவோ காண்பது தவறு.
'வன்முறை அல்லது வெறுப்பு பிரச்சாரங்களை அவர்கள் கூறுவதை நான் கேட்கவில்லை. அவர்களைக் அவதானிப்பது தேவையானது. ஆனால், அனைத்து முஸ்லிம்களையும் ஒரே பையில் போடவே கூடாது.'
அவர்களின் கூற்று இவரைப் பொறுத்தவரை வன்முறையே அல்ல என இவர் மூடி மறைக்க முனைகின்றார். தான் கேட்கவில்லை என்பதற்காக அரசு அவதானிக்கும் வன்முறைப் பேச்சுக்கள் நடக்கதான் செய்கின்றது.
அரசியல்வாதிகள் இதை தீவிர வலதுசாரி வாக்குகளை ஈர்க்க பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
'நாங்கள் பிரான்ஸ் பிரஜைகள் தான். ஆனால் இன்னும் சிலர் எங்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்க்கிறார்கள். இது போதுமானது. இந்த வெறுப்பு அரசியல் பேச்சுகள் நிற்கவேண்டும்.'
அவர் மேலும்கூறினார், நீம் நகரில் உள்ள அவரது மச்ஜிதில் ஆயிரக்கணக்கானோர் ஜும்மா தொழுகைக்காக வருகின்றனர், ஆனால் வெறுப்பும் தீவிரவாதமும் நிறைந்த பேச்சுக்கள் எதுவும் அஙகு இல்லையென்று உறுதிபடச் சொல்கிறார்.
'மதத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பேசலாம், ஆனால் அது மிகச்சிறிய ஓர் அற்பக்குழு என அப்தெல்லா சேக்ரி தெரிவித்துள்ளார்.
இப்படியான அற்பக் குழுக்கள் தான் மிகவும் ஆபத்தானதாக அமையும்!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan