இல்-து- பிரான்ஸ் உட்பட இடி மின்னலுடன் கூடிய மழை - 52 பிரஞ்சு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
13 ஆனி 2025 வெள்ளி 00:19 | பார்வைகள் : 3564
Météo-France வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று வெள்ளிக்கிழமை (13 ஜூன்), பிரான்சின் மேற்குப் பகுதிகள் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 52 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, காலை நேரத்தில் பிரெத்தோனில் சிறிய மழை பெய்யலாம். பிற்பகலில் வானம் கடுமையாக கருமை அடைந்து, பிரெத்தோனில் இருந்து நோர்மாந்தி, பின்னர் Hauts-de-France பகுதிகளுக்கு மின்னலுடன் கூடிய மழை விரைவாகப் பரவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடிமழைகள் மிகவும் பலமானதாக இருக்கலாம். பனிக்கட்டிக் கல் மழை (grêle), அதிக மழைவீழ்ச்சி மற்றும் மணிக்கு 70 முதல் 90 கிலோமீற்றர் வேகமுள்ள பலத்த காற்றும் ஏற்படலாம் என Météo-France எச்சரிக்கிறது.
Paris,la Seine-et-Marne, les Yvelines, l’Essonne, les Hauts-de-Seine, la Seine-Saint-Denis, le Val-de-Marne, le Val-d’Oise, l’Aisne, les Ardennes, l’Aube, l’Aveyron, le Calvados, la Charente-Maritime, le Cher, les Côtes-d’Armor, la Dordogne, l’Eure, l’Eure-et-Loir, le Finistère, la Haute-Garonne, le Gers, la Gironde, l’Ille-et-Vilaine, l’Indre, l’Indre-et-Loire, les Landes, le Loir-et-Cher, la Loire-Atlantique, le Loiret, le Lot, le Lot-et-Garonne, le Maine-et-Loire, la Manche, la Marne, la Mayenne, le Morbihan, le Nord, l’Oise, l’Orne, le Pas-de-Calais, les Pyrénées-Atlantiques, les Hautes-Pyrénées, la Sarthe,, la Seine-Maritime, les Deux-Sèvres, la Somme, le Tarn, le Tarn-et-Garonne, la Vendée, la Vienne, l’Yonne. ஆகிய மாவட்டங்கள் வானிலை மையத்தின் எச்சரிக்கைக்குள் உள்ளன.
மற்றொரு பக்கமாக, ஸ்பெயினிலிருந்து வரும் மழை மேகங்கள் பெரினே மலைகளை கடந்து தென்மேற்குப் பிரான்சிலும் (குறிப்பாக Aquitaine பகுதியில்) கடும் மழை, கல்மழை மற்றும் மணிக்கு 100 கிலோமீற்றரிற்கும் மேலான சூறாவளி காற்றை கொண்டு வரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan