Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் சிறை.. நாளை பிரான்ஸ் திரும்புகிறார் Rima Hassan!!

இஸ்ரேலில் சிறை.. நாளை பிரான்ஸ் திரும்புகிறார் Rima Hassan!!

12 ஆனி 2025 வியாழன் 16:53 | பார்வைகள் : 3085


 

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Rima Hassan நாளை வியாழக்கிழமை நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு 12 தன்னார்வலர்களோடு காஸா நோக்கி சென்றிருந்த படகை, இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே நாடு திரும்பிய நிலையில், Rima Hassan மற்றும் மேலும் மூவர் அங்கிருந்து வெளியேற மறுத்தனர்.

இந்நிலையில், அவர்கள் கட்டாயப்படுத்தி பரிசுக்கு வரும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட உள்ளனர். 'நாளை ஜூன் 13, வியாழக்கிழமை அவர்கள் நாடு திரும்புவார்கள்' என வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot இன்று தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்