2,567 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்... !!

11 ஆனி 2025 புதன் 20:01 | பார்வைகள் : 7304
பிரெஞ்சு கடல் ஒன்றில் முதன் முறையாக மிக ஆழமான கடற்படுகையில் உள்ள கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Ramatuelle (Var) நகர கடற்பிராந்தியத்தில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 16 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 30 மீற்றர் நீளமும், 7 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பலில் செராமிக் பொருட்களும், இரும்புக் கம்பிகள் போன்ற பொருட்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Camarat 4 என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் ஒரு நங்கூரமும், ஆறு இரும்பு பீரங்கிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,567 மீற்றர் ஆழத்தில் இந்த கப்பல் இருப்பதாகவும், பிரெஞ்சு கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மிக ஆழமாக கப்பல் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1