ட்ரம்ப் குறித்த பதிவுகள்- எலான் மஸ்க் வருத்தம்
11 ஆனி 2025 புதன் 15:46 | பார்வைகள் : 5131
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார்.
எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டன” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி என்ன? - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.
வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் மீண்டும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.
2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan