போதை மன்னன் உலங்குவானூர்தியில்!!
11 ஆனி 2025 புதன் 12:04 | பார்வைகள் : 4576
காண்டே-சூர்-சார்த் (Condé-sur-Sarthe) என்ற உயர் பாதுகாப்பு சிறையில் பிப்ரவரி முதல் அடைக்கப்பட்டிருந்த த்அம்ரா, இன்று (11 ஜூன்) காலை 7:30 மணியளவில் ஒரு உலங்குவானூர்தி மூலம் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, பரிஸ் நீதிமன்றத்தில் தேசிய குற்றங்கள் எதிர்ப்பு நீதிபதிகளால் (துரயெடஉழ) விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
இந்த முடிவு பிரான்சின் அரசாங்கத்திற்குள் கூட பிளவை ஏற்படுத்தியது. ஈ எனப்படும் La Moucheஎன்ற புனைப்பெயரால் அறியப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர், 14 மே 2024 அன்று சிறை அதிகாரிகள் கொல்லப்பட்ட ஒரு வன்முறை மீட்பு முயற்சியில் ஈடுபட்டவர். அப்போது இரண்டு சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் கடுமையாக காயமடைந்தனர்.
பின்னர், 9 மாதங்கள் தப்பியோடிய அம்ரா, 22 பிப்ரவரி 2025 அன்று ருமேனியாவின் புக்காரெஸ்ட்டில் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலை தொழிற்சங்கங்கள், நீதிபதிகள் சிறைக்கு வந்து விசாரணை நடத்தவோ அல்லது காணொளி மூலம் விசாரிக்கவோ வேண்டும் என வலியுறுத்தின. உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ கூட, 'இவ்வளவு ஆபத்தான கைதிகளை சிறையிலிருந்து வெளியேற்றுவது பெரும் ஆபத்து' என எச்சரித்திருந்தார்.
ஆனால், நீதி அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் GIGN பாதுகாப்பில் எந்த சிக்கலும் நடக்காது' என்று உறுதியளித்தார்.
பரிஸ் சட்டமா அதிபர்அரச லோரோ பெக்கோ 'வழக்கு விரைவாக முன்னேற வேண்டும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது அவரது முதல் விசாரணை... அவரது பதிவுகள், ஆதாரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதனாலேயே இறுதிக்கட்ட நடவடிக்கையாக பாதுகாப்பாக உலங்கு வானூர்தியில் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan