பயங்கரவாதம் பாக்.,கில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்தியாவின் பதிலடி நிச்சயம்: அமைச்சர் ஜெய்சங்கர்
10 ஆனி 2025 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 2019
பயங்கரவாதம் பாகிஸ்தானுக்குள் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே இந்தியா பதிலடி கொடுக்க தயங்காது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இருதரப்பு உறவுகள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணம் 7 நாட்கள் என்ற வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
பெல்ஜியத்தின் பிரெஸ்சல்ஸ் நகரத்துக்குச் சென்றுள்ள அவர், நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா அளித்த பதிலடி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது;
பயங்கரவாதத்தை அரசினுடைய கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்தும் நாடு பாகிஸ்தான். அதுதான் இப்போது முழு பிரச்னை.
பயங்கரவாதம் பாகிஸ்தானுக்குள் எந்த இடத்தில் ஊடுருவி இருந்தாலும், அந்த இடத்தில் அங்கே இந்தியா பதிலடி கொடுக்க தயங்காது.
மே 10ம் தேதி சண்டை ஒரேயொரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டது. அன்றைய நாளில் நாங்கள் 8 பாகிஸ்தான் விமானநிலையங்களையும் தாக்கி அவற்றை முடக்கினோம். நாங்கள் சொன்னதை நம்ப வேண்டாம். கூகுளில் கிடைக்கும் படங்கள், பாதிக்கப்பட்ட ஓடுபாதைகளை நீங்கள் பார்க்கலாம்.
பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு திறந்த வெளியில் பயிற்சி அளித்து, அண்டை நாட்டின் மீது கட்டவிழ்த்து விடுகிறது.
அவர்களுக்கு எங்களின் செய்தி என்னவென்றால் ஏப்ரல் மாதம் நடத்தியது போன்ற சம்பவங்களை நீங்கள் திரும்ப, திரும்ப தொடர்ந்தால் எங்கள் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan