29 வயதிலேயே ஓய்வை அறிவித்த அதிரடி வீரர் பூரன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
10 ஆனி 2025 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 1856
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரரான நிக்கோலஸ் பூரன் திடீர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடரில் 39 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதகளம் செய்தவர் நிக்கோலஸ் பூரன்.
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிக்காக விளையாடிய இவர், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
29 வயதாகும் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) மேற்கிந்திய தீவுகள் தேசிய அணிக்காக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் பூரன் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரரான பூரன் ஐபிஎல், சிபிஎல் போன்ற லீக் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பூரன் 106 டி20 போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2275 ஓட்டங்களும், 61 ஒருநாள் போட்டிகளில் 1983 ஓட்டங்களும் விளாசியுள்ளார். இதில் 3 சதம், 11 அரைசதங்கள் அடங்கும்.
அதே சமயம் 90 ஐபிஎல் போட்டிகளில் 14 அரைசதங்களுடன் 2293 குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan