காணவில்லை - உதவி கோரும் காவற்துறையினர்!
9 ஆனி 2025 திங்கள் 00:52 | பார்வைகள் : 5683
Embrun (Hautes-Alpes) காவற்துறைப் படையணிகள் தற்போது 43 வயதான ரோமன் ஒசாரியை (Romain Auzary) தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவர், ஜூன் 6 இரவு முதல் 7ஆம் தேதி அதிகாலை வரை, Gap அருகே உள்ள Outdoormix விழாவில் கலந்து கொண்டிருந்தபோது காணாமற் போயுள்ளார்.
ரோமன் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) இரவு 1.30 மணி அளவில் கடைசி முறையாக காணப்பட்டதாக, அவரது நெருக்கமான நண்பர் ஒருவர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். Hautes-Alpes ஜோர்தார்மின் பதிவுடன் ரோமைனின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

Outdoormix விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு கூடாரப் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
அடையாளங்கள்
உயரம்: 1.78 மீட்டர்
உடல் அமைப்பு: மிதமான பருமன்
நீல நிற மேலாடை அல்லதுது கால்பந்து ஜெர்சி மற்றும் பெர்முடா அணிந்திருந்துள்ளார்.
இடது காதில் 'யானை எலும்பு (ivoire)' வளையல் இருந்தது
'ளுழயn' எனும் பெயருடன் கழுத்துப்பக்கம் ளுழயn என்பது அவரது 9 வயது மகனின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.
ஜூன் 7 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, அவர் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு உடனடியாக தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ரோமைனின் தோற்பை (Sac a dos) Durance ஆற்றின் அருகே விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
தேடுதலில் காவல்துறையின் நிலப்படை, படகு, உலங்குவானூர்தி உள்ளிட்ட பல்வேறு சக்திகள் ஈடுபட்டுள்ளன
இதுவரை எந்த அறிகுறிகளோ, வேறு தடயங்களோ கிடைக்கவில்லை
Embrun காவற்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்
தன்னார்வலர்கள் தேடல் பணியில் உதவிக்காக வந்துள்ளனர்
தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
Embrun காவல்துறையின் எண்: 04 92 43 16 02
அல்லது பொதுவான அவசர எண்: 17
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan