அதிபரை வீட்டில் வைத்துத் தாக்கிய மாhணவர்கள் - பதற்றம்!
8 ஆனி 2025 ஞாயிறு 20:28 | பார்வைகள் : 11567
2025 ஜூன் 4, புதன்கிழமை மாலை, Yvelines மாவட்டத்தில் உள்ள Mantes-la-Ville நகரில், ஒரு பாடசாலையின் பெண் அதிபரின் இல்லத்திற்கு முன்னால் , அந்தப் பள்ளியில் படித்த ஐந்து முன்னாள் மாணவர்களால், முதலில் தவறான வார்த்தைகளால் கேவலப்படுத்தப்பட்டதுடன், பின்னர் தாக்குதலுக்கும் இலக்கானார்.
இந்த திடீர் சம்பவம், கல்வித் துறையின் உள்ளேயே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறித்த மாணவர்கள் முதலில் அந்த அதிபரை பெயரால் அழைத்து வசைசொற்கள் கூறியுள்ளனர்.
பின்னர், 14 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு கல்லை எடுத்து அவருடைய வீட்டை நோக்கி எறிந்துள்ளான். இந்த தாக்குதலால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கு உடனே நடவடிக்கையில் ஈடுபட்ட அதிபரின் கணவர், அந்த இளைஞரை பிடித்துக்கொடுத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டான்.
முதல் கட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர்கள் மற்றும் அதிபர் இடையே எந்தவிதமான பழைய மனக்கசப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதுடன், இவர்கள் சில வருடங்களுக்கு முன் அவர் பணியாற்றும் பாடசாலையிலேயே கல்வி கற்றிருந்த மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 14 வயது இளைஞர், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாலும், இனிவரும் நாட்களில் மீண்டும் காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
பாடசாலையில் ஏதம் பிரச்சினை என்றால் பெற்றோர் மூலம் பாடசாலை நிர்வாகத்தை அணுகலாம்.
ஆனால் இப்போது, இளம் வயதிலேயே மாணவர்கள் ஆசிரியர்களை நேரடியாகக் குறை கூறும் நிலை வந்துள்ளது. இந்த முறையில், ஒரு அதிபரிற்கு நேரடியாக நெருக்கடி ஏற்படுத்தும் அளவுக்கு அவர்கள் சென்றிருப்பது மிகக் கவலையளிக்கக்கூடிய விடயமாகும்,' என தேசிய பாடசாலை சங்கத்தின் தலைவர் பிலிப் ரதினே (Philippe Ratinet) தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan