பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பாக்.: சசிதரூர் குற்றச்சாட்டு
9 ஆனி 2025 திங்கள் 06:50 | பார்வைகள் : 2560
பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு பாகிஸ்தான் வெகுமதி அளித்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர் குறித்து தகவல் தெரிவித்ததாக டாக்டர் ஷாகில் அப்ரிதியை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அங்கு அவர் சித்ரவதை செய்யப்படுவதாகவும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி., பிராட் ஷெர்மன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மன் கருத்து வரவேற்கத்தக்கது. ராணுவ அலுவலகம் அருகே பாதுகாப்பாக வாழ்ந்த பயங்கரவாதி ஒசாமாபின்லாடனுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததுடன், அவர் குறித்து தைரியமாக தகவல் தெரிவித்த டாக்டரை கைது செய்து தண்டனை வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஆதரித்தால் அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். அவர்களை காட்டிக் கொடுத்தால் தண்டனை கிடைக்கும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan