ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட பணயப் கைதிகளில் சடலங்கள் மீட்பு
8 ஆனி 2025 ஞாயிறு 08:50 | பார்வைகள் : 1887
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயப் கைதிகளில் மேலும் ஒரு பணயப் கைதியின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயப் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, பணயப் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணயப் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய் (வயது 70) மற்றும் அவரது கணவர் காடி ஹகாய் (வயது 72) ஆகிய இருவரின் உடல்கள் கடந்த 5ஆம் திகதி கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த நிலையில், மேலும் ஒரு பணயப் கைதியின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த நட்டாபாங் பின்ட்டா என்பவர் ஹமாஸ் அமைப்பினரால் பணயப் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டவர் ஆவார்.
அவரை ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும், அவரது உடல் ரபா பகுதியில் கண்டெக்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 55 பேர் பணயப் கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என இஸ்ரேல் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan