பிரான்ஸ்-பிரேசில் கோக்கைன் கடத்தல்: €486,000 மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்!
7 ஆனி 2025 சனி 16:17 | பார்வைகள் : 3370
பிரான்ஸ் மற்றும் பிரேசிலுக்கிடையே Roissy-Charles-de-Gaulle விமான நிலையம் வழியாக நடந்த கோக்கைன் கடத்தல் வலையம் முறியடிக்கப்பட்டுள்ளது.
2024 இறுதியில் 50 கிலோகிராம் கோக்கைன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை துவங்கியது. இந்தக் கடத்தலில் ஒரு விமான நிலைய நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், மாதந்தோறும் 20 முதல் 50 கிலோ வரை கோக்கைன் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் முறையாக திட்டமிட்டு போதைப்பொருளை வெளியேற்றி, அந்த பணத்தை சட்ட சிக்கல் இன்றி மாற்ற முயன்றுள்ளனர்.
சோதனையின் போது துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் €100,000 பணம் உட்பட €486,000 மதிப்புள்ள குற்றச்செயலால் சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan