அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
7 ஆனி 2025 சனி 13:51 | பார்வைகள் : 5617
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நீண்ட நாள் நட்பு உள்ளது. அதனால் அவர் என்னை சந்தித்து பேசினார்'' என நிருபர்கள் கேள்விக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை போகிறேன். சின்ன மகள், கொள்ளு பேரன் எல்லாம் சென்னையில் தான் இருக்கிறார்கள். 2 நாட்கள் சென்னை செல்கிறேன். மருத்துவ சோதனைக்காக சென்னைக்கு செல்லவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
குருமூர்த்தி சந்திப்பு ஏன்?
ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நீண்ட நாள் நட்பு உள்ளது. அதனை மதிக்கிறேன். அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். அதேபோல் சைதை துரைசாமி. அவரும் ரொம்ப வருடமாய் எனக்கு பழக்கம். அதனால் இரண்டு பேரும் அன்றைக்கு வந்தார்கள்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.
அன்புமணி உடன் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''பார்த்தாங்க, பேசுனாங்க, அப்புறம் வந்து சொல்கிறேன். இப்பொழுது நேரம் ஆகிவிட்டது '' என ராமதாஸ் பதில் அளித்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan