ஒரு லட்சம் குவாட்ரில்லியன் மதிப்புள்ள விண்கல்லை குறிவைக்கும் நாசா - என்ன திட்டம்?
7 ஆனி 2025 சனி 07:24 | பார்வைகள் : 2301
தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் உள்ள விண்கல்லை நாசா குறி வைத்துள்ளது.
செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையே கடந்த 1852 ஆம் ஆண்டு 16 Psyche என்ற விண்கல் கண்டறியப்பட்டது.
64,000 சதுர மைல் பரப்பளவுடன் ஐஸ்லாந்து நாட்டின் அளவிற்கு உள்ள இந்த விண்கல்லில் அரிதான மற்றும் விலைமதிப்புள்ள தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் உள்ளன.
இதன் மதிப்பு ஒரு லட்சம் குவாட்ரில்லியன் டொலர் இருக்கும் என கூறப்படுகிறது. 1 க்கு அருகில் 15 பூஜ்ஜியங்களை போட்டால் வருவதே குவாட்ரில்லியன் ஆகும்.
இந்த விண்கல்லுக்கு அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த 2023 ஆம் ஆண்டு விண்கலம் ஒன்றை அனுப்பியது.
2.2 பில்லியன் மைல்க்கு அதிகமான தொலைவில் உள்ள இந்த விண்கலம் தற்போது 2 கோடி கி.மீ பயணித்துள்ளது. 2029 ஆம் ஆண்டு அந்த விண்கல்லை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா இந்த விண்கல்லை நோக்கி விண்கலத்தை அனுப்ப காரணம், பூமியைப் போன்ற கோள்களின் மையங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு உருவானது, ஆரம்பகால சூரிய மண்டலத்தில் கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்காக இந்த பணி வடிவமைக்கப்பட்டுள்ளது" என நாசா தெரிவித்துள்ளது.
இதில் உள்ள அரிய உலோகங்களை வெட்டியெடுத்து பூமிக்கு கொண்டு வர சில தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சுற்றுச்சூழல் சவால்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை மற்றும் அதன் தூரம் காரணமாக, அதனை வெட்டி எடுத்து கொண்டு வருவது ஆபத்தான மற்றும் அதிக செலவு பிடிக்கும் முயற்சியாகும்.
ஆனால், இன்னும் அந்த விண்கல்லையே அடைய முடியாத நிலையில், அதில் உள்ள அரிய உலோகங்களை வெட்டி எடுத்து பூமிக்கு கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan