மொஹமட் அம்ராவை வெளியே அழைத்துச் செல்வது – கொடூரத் தாக்குதலை மீண்டும் நினைவூட்டும்!
7 ஆனி 2025 சனி 02:00 | பார்வைகள் : 3786
மிகவும் ஆபத்தான குற்றவாளி எனக் கருதப்படும் மொஹமட் அம்ரா, ஜோந்தார்மரியின் புஐபுN சிறப்பு படையினரால், பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
2024 மே மாதம் Incarville-இல், அம்ராவை மீட்டுச் செல்லும் முயற்சியில் 2 சிறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். அதையடுத்து, அவரை மீண்டும் விசாரணைக்காக, நோர்மோந்தியில் இருந்து பரிஸ் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் தீர்மானம், பல தரப்பில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
அம்ராவை சிறை வாகனத்தில் கொண்டு செல்லும் எண்ணம், Incarville தாக்குதலை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. சிறை அதிகாரிகள் இதே மாதிரியான தாக்குதல் மீண்டும் நடக்கும் என அஞ்சுகிறார்கள் என அரச தரப்பு சட்டமா அதிபர் லோர் பெக்குவோ கூறியுள்ளார்.
'நீதிபதிகள் அம்ராவை சந்திக்கவேண்டும் என்றால், அவர்கள் சிறைக்கு செல்லலாம் அல்லது காணொளி மூலம் விசாரணை நடக்கலாம்.' என சிறை ஊழியர் சங்கங்கள் மற்றும் உள்துறை அமைச்சு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சட்டமா அதிபர் விளக்கம் அளிக்கையில்,
'முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைத் தூக்கிச் செல்வது சாத்தியமில்லை'
'மொஹமட் அம்ராவின் முதல் விசாரணை என்பதால் நேரில் இருக்க வேண்டும்'
என கூறியுள்ளார்.
அம்ரா மீண்டும் எதிர்காலத்தில் மற்ற குற்றவாளிகளுடன் நேரில் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால், மீண்டும் அழைத்துச் செல்லப்படக்கூடும் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தாக்குதலைத் தடுக்கக் கூடிய பலமுள்ள GIGN படையணிகள் செல்வதால் ஆபத்துகள் நீக்கப்படும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan